அப்படிப்போடு! போட்டி போடும் அரசியல் சண்டை… #GetOutStalin ட்ரெண்டாகும் பாஜக-வின் பதிவு..!

ன்று காலை சரியாக 6 மணிக்கு தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் கெட் அவுட் ஸ்டாலின் (#GetOutStalin) ஹேஷ்டேக்கை ஆரம்பித்து வைத்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

#GetOutStalin என்ற ஹேஷ்டேகை பதிவு செய்து அவர் பகிர்ந்த ட்வீட்டில், “ஒரே குடும்பத்தின் ஆதிக்கம், கரைபடிந்த அமைச்சரவை, ஊழலின் மையம், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, தமிழகத்தை போதைப் பொருள் மற்றும் கள்ளச் சாராயத்தின் புகலிடமாக மாற்றியது, கடனாளி மாநிலமாக்கியது, சிதிலமடைந்த கல்வித் துறை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத சமூகம், சாதி மதத்தை வைத்து பிரிவினைவாத அரசியல் செய்வது, மக்களுக்கு நல்லாட்சி வழங்கத் தவறியது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது என்றிருக்கும் திமுக அரசை மக்கள் விரைவில் அப்புறப்படுத்துவார்கள்.” எனத் தெரிவித்து இருந்தார்.

முன்னதாக நேற்று கெட் அவுட் மோடி என்கிற ஹேஷ்டேக்கை பகிர்ந்து சமூக வலைதளங்களில் திமுகவினர் ட்ரெண்டாக்கினர். இதனால் வெறுப்பான அண்ணாமலை, ”நீங்கள் போட்ட ட்வீட்டை மொத்தமாக குறிப்பெடுத்து எழுதி வைத்துக் கொள்ளுங்கள். நாளைக்கு 6 மணியிலிருந்து பாஜகவுடைய டைம். நாங்கள் எவ்வளவு ட்வீட் செய்கிறோம் என்று குறிப்பெடுத்து கொள்ளுங்கள். அதன் பிறகு நாளை மறுநாள் இந்த பஞ்சாயத்தை முடிவுக்கு கொண்டு வருவோம். இன்று ஒரு நாள் உனக்கு… நாளை ஒரு நாள் பாஜகவுக்கு” என சவால் விடுத்திருந்தார் அண்ணாமலை.

இந்நிலையில் அவர் சொன்னது போலவே, #GetOutStalin என்கிற ஹேஷ்டேக் பயங்கரமாக ட்ரெண்டாகி வருகிறது. இந்த செய்தியை பதிவு செய்யும் வரை 5 லட்சத்து 55 ஆயிரம் பேர் இந்த ஹேஸ்டேக்கை பயன்படுத்தி ட்ரெண்டாக்கி வருகின்றனர். இந்திய அளவில் #GetOutStalin ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. #பால்டாயில்_பாபு என்கிற ஹேஸ்டேக்கும் படுபயங்கரமாக ட்ரெண்டாகி வருகிறது. இதுவரை 2 லட்சத்து 6 ஆயிரம்பேர் இந்த கேஷ்டேக்கை பகிர்ந்துள்ளனர்.

#GetOutModi என திமுகவினர் பகிர்ந்த ஹேஷ்டேக்கை நேற்று முதல் இன்று வரை 4 லட்சத்து 14 ஆயிரம் பேர் இப்போது வரை பகிர்ந்துள்ளனர். ஆனால், இன்று காலை ஆரம்பித்த #GetOutStalin அதையும் தாண்டி வெறும் 5 மணி நேரத்திற்குள்ளேயே அதனை முறியடித்துள்ளது. 24 மணி நேரத்தில் திமுக செய்த காரியத்தை வெறும் 5 மணி நேரத்திற்குள்ளேயே முறியடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர் பாஜகவினர். இதனை சற்றும் எதிர்பாராத திமுகவினர், தப்பு பண்ணிட்டோமே சிங்காரம் எனப் புலம்பி வருகின்றனர்.

இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி திமுகவை பங்கம் செய்து வருகின்றனர் பாஜகவினர். அவற்றில் சில பதிவுகள் இங்கே…

தலைவர் ஆரம்பிச்சு வச்சு 2 மணி நேரத்துல 225K posts and counting.
தப்பு பண்ணிட்டயே சிங்காரம் 😄#GetOutStalinpic.twitter.com/3TDCsC5APz

வாழத்தகுதியற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றிய ஆளத் தகுதியற்ற #Getoutstalinpic.twitter.com/Y6eKLFowTQ

காலங்காத்தால கோலம் போட்டு மங்களகரமா ஆரம்பிப்போமா!!!

தமிழகத்தை பிடித்த பீடை ஒழியட்டும்!#Getoutstalin#GetOutStalin#getoutdmkfromtamilnadupic.twitter.com/YFZ3VNeqXG

* ஆறு வயது குழந்தை முதல் 60 வயது ஆயாக்கள் வரை எவருக்கும் பாதுகாப்பு கொடுக்க முடியாத ஸ்டாலினே தமிழகத்தை விட்டு வெளியேறு 😤#GetOutStalin#பால்டாயில்_பாபுpic.twitter.com/KUnzSbMvg0

Hey Ex நாம் தமிழர் கட்சி தொம்பி @rajiv_dmk இந்த வெள்ளை குடைக்கும் பம்முரத்துக்கும்
ஒரு டயளாக் நீயே சொல்லு ok va??

நான் நேற்று தான் 23ம் புலிகேசி படம் பார்த்தேன் #பால்டாயில்_பாபு#GetOutStalinpic.twitter.com/vOF8oH2vrF

இதையும் படிங்க: மலைடா..! திமுக முகத்தில் கரியைப் பூசிய அண்ணாமலை… 4 மணி நேரத்திலேயே அடித்து நொறுக்கி அட்ராசிட்டி..!