கோவை கவுண்டம்பாளையம், மவுரியா ரெசிடென்சி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் பாபு. இவரது மனைவி சாவித்திரி ( வயது 60) இவர் நேற்று சிவானந்த காலணியில் இருந்து மேட்டுப்பாளையம் ரோட்டுக்கு வருவதற்கு அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்தார். மேட்டுப்பாளையம் ரோடு பஸ் நிலையத்தில் இறங்கும் போது அவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் செயினை காணவில்லை. யாரோ ஓடும் பஸ்சில் திருடிவிட்டனர். இது குறித்து சாவித்திரி சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஓடும் பபேருந்தில் மூதாட்டியிடம் 6 பவுன் செயின் திருட்டு..!
