தென்காசி மாவட்டம் கழுகுமலை பக்கம் உள்ள சம்பா குளத்தைச் சேர்ந்தவர் தவசி பாண்டியன். இவரது மகன் குருசாமி (வயது 27) கோவையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார். இதற்காக கோவை டாடாபாத் எஸ்.என்.டி லேஅவுட் ஒரு மென்ஷனில் அறை எடுத்து தங்கி உள்ளார். இவர் நேற்று தங்கி இருந்த அறையில் பாத்ரூம் ஜன்னலில் லுங்கியை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தாராம் அந்த காதலியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது இதுகுறித்து இவரது தம்பி சங்கர் காட்டூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
காதலியுடன் தகராறு… காதலன் தூக்கிட்டு தற்கொலை..
