கோவை மாவட்டம் காரமடை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் துறைக்கு தகவல் வந்தது. போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் காரமடை மற்றும் தனிப்படை போலீசார் அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்று கொண்டிருந்ததாக மேட்டுப்பாளையம் வெள்ளியங்காட்டைச் சேர்ந்த மணி என்பவரின் மகன்கள் தமிழ்ச்செல்வன் ( வயது 36)மகேஷ் குமார் (வயது 34) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் தொடர்ந்து கஞ்சாவியாபாரம் செய்து வந்ததால் இவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சித் தலைவருக்கு போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் பரிந்துரை செய்தார். கலெக்டர் பவன்குமார் உத்தரவின் பேரில் தமிழ்ச்செல்வன், மகேஷ் குமார் இருவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களுக்கு நேற்று வழங்கப்பட்டது..
கஞ்சா விற்பனை – அண்ணன், தம்பி மீது பாய்ந்தது குண்டர் தடுப்புச் சட்டம்.!!
