கோவை மாவட்டம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் விற்கப்படுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர்.
கோவை மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில், முதல் முறையாக குட்கா விற்பனையில் ஈடுபட்டு பிடிபடுவோருக்கு ரூ 5 ஆயிரம், இரண்டாவது முறை விற்பனை செய்தால் ரூ.10,000 மற்றும் தொடர்ந்து விற்பனை செய்தால் கடைகளுக்கு பூட்டி சீல் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது . அதன்படி, கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாவட்ட போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இணைந்து கூட்டு சோதனையில் ஈடுபட்டதில், பல்வேறு சில்லறை விற்பனை கடைகளில் இருந்து சுமார் 5.45 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், இது தொடர்பாக 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விற்பனையாளர்களிடம் இருந்து ரூ.40 ஆயிரம் அபராதமாக வசூல் செய்யப்பட்டது.