கோவை பீளமேடு பகுதியில் பாஜக அலுவலகம் திறப்பு விழா மற்றும் ஈஷா சிவராத்திரி விழாவில் பங்கேற்க மத்திய மந்திரி அமித்ஷா டெல்லியில் இருந்து தனி விமான மூலம் நேற்று முன்தினம் இரவு 9 – 30 மணிக்கு கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய மந்திரி எல். முருகன், பாஜக தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன் .துணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, ஒருங்கிணைப்பாளர் எச். ராஜா, எம்.எல்.ஏக்கள் வானதி சீனிவாசன் நயினார் நாகேந்திரன், முன்னாள் கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன், முன்னாள் மத்திய மந்திரி பொன் .ராதாகிருஷ்ணன் பொருளாளர் எஸ். ஆர். சேகர் உள்ளிட்ட பலர் பூங்கொத்து கொடுத்த அமிஷாவுக்கு வரவேற்பு அளித்தனர் . விமான நிலையத்துக்கு வெளியேயும் பாஜகவினர் திரண்டு வந்து வரவேற்பு கொடுத்தனர். பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஆதிநாராயணன் பெருமாள் கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது பின்னர் கார் மூலம் அவிநாசி ரோட்டில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார் . அங்கு கட்சி பிரமுகர்கள் – தொழில்துறையினர் அமித்ஷாவுக்கு வரவேற்பு கொடுத்தனர். அவர்களுடன் கலந்துரையாடினார். நேற்று மதியம் பீளமேட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தை திறந்து வைத்தார். அங்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.. பின்னர் விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஈஷா யோகா மையம் சென்றார். அங்கு அவருக்கு ஈஷா யோகா மைய நிறுவன ஜக்கி வாசுதேவ் உள்ளிட்ட பலர் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து அவர் அங்குள்ள தியானலிங்கம் இருக்கும் இடத்துக்கு சென்று லிங்க பைரவியை வழிபட்டார். நேற்று இரவு சிவராத்திரி விழா நடைபெறும் ஆதியோகி சிலை இருக்கும் இடத்துக்கு கார் மூலம் செக்கிறார்… அங்கு சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டார் .விழா முடிந்ததும் இரவில் ஈஷா மையத்தில் தங்கி ஓய்வெடுத்தார் . இன்று ( வியாழன்) காலை 9 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் கோவை விமான நிலையத்திற்கு சென்று தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார் .மத்திய மந்திரி அமித்ஷா கோவை வருகையை யொட்டி தமிழ்நாடு காவல்துறைசட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் மேற்பார்வையில் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. செந்தில்குமார், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காக கோவை மாநகர பகுதியில் இருந்து 3 ஆயிரம் போலீசாரும், புறநகர் பகுதியில் இருந்து 4 ஆயிரம் போலீசாரும் என மொத்தம் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவையில் இருந்து ஈஷா யோகா மையம் செல்லும் வழியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் . இது தவிர மத்திய மந்திரி அமைச்சர் தங்கும் நட்சத்திர விடுதி ,கட்சி அலுவலகம் மற்றும் பல இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் . இதற்காக வெளி மாவட்டங்களில் இருந்தும் போலீசார் வந்துள்ளனர். வெளிமாவட்டங்களில் இருந்து கோவைக்கு வரும் அனைத்து வாகனங்களும் சோதனை சாவடிகளில் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகிறது. மற்றும் மாநகர் புறநகர் பகுதியில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டு வந்தனர் . இது தவிர “பட்ரோல்” போலீசாரும், தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர் .
கோவை வந்த மத்திய மந்திரி அமித்ஷா பாஜக அலுவலகத்தை திறந்து வைத்தார்..!
