லாரியில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா கடத்தல் – டிரைவர் கைது..!

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுதும் தீவிர கஞ்சா – குட்கா – போதை மாத்திரை வேட்டை நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பக்கம் உள்ள திவான்ஷா புதூர் மீனாட்சிபுரம் சோதனை சாவடி அருகே ஒரு லாரியில் குட்கா கடத்தப்பட்டு வருவதாக மாவட்ட காவல் துறைக்கு ரகசிய தகவல் வந்தது . ஆனைமலை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் அங்கு சோதனை நடத்தினார்.  அப்போது அந்த வழியாக வந்து ஒரு லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார் . அதில் 1208 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ( குட் கா) மூட்டைகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. லாரியும் ,குட்காவும் பறிமுதல் செய்யப்பட்டது . இது தொடர்பாக லாரி டிரைவரானகேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த முகமது சபீல் (வயது 39 )கைது செய்யப்பட்டார். கேரளாவைச் சேர்ந்த நவாஸ் என்பவரை தேடி வருகிறார்கள்..