அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சில் பெஸ்டர் லாகரி ( வயது 21 ) இவர் மதுக்கரை பகுதியில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார் . இவர் தனது சொந்த மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் மீது ஒரு தலை காதல் வைத்திருந்தாராம். எவ்வளவோ முயற்சி செய்தும் அந்தப் பெண் இவரை காதலிக்கவில்லை. இதனால் மனமுடைந்த சில்ப பெஸ்டர் லாகரி நேற்று அவர் தங்கி இருந்த அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து செட்டிபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஒருதலை காதல்… வடமாநில வாலிபர் தற்கொலை..
