திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் சாந்தி. இவர் கடந்த 2000-ம்ஆண்டு திண்டுக்கல் மாவட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிகள் சேர்ந்தார். பின்னர் பதவி உயர்வு பெற்று கடந்த 2018-ம்ஆண்டில் சார் பதிவாளராக பதவி உயர்வு பெற்றார். இதனால் அவர் தஞ்சாவூர், சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம், உள்ளிட்ட பல பகுதிகளில் சார்பாக பணியாற்றினார். தற்போது அவர் குமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் மாவட்ட உதவி சார்பதிவாளராக பணியாற்றி வருகிறார் .இந்த நிலையில் சாந்தி மேட்டுப்பாளையத்தில் சார் பதிவாளராக (பொறுப்பு)பணியாற்றியபோது அவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திவ்யா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து போலீசார் சாந்தி எந்த பகுதிகளில் எல்லாம் சார்பதிவாளராக பணியாற்றினாரோ அங்கு எல்லாம் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் சார்பதிவாளர் சாந்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தெரியவந்தது இதை யடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பதிவாளர் சாந்தி, அவருடைய மகன் ராஜேஷ் மருமகள் பிரபிஜா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியதாவது :-சாந்தி கடந்த 20 20 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி வரை உள்ள காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ 1 கோடியே 52 லட்சத்து 12, ஆயிரத்து 380 க்கு சொத்து சேர்த்துள்ளார். வின்னர் அவர் தனது மகன் மற்றும் மருமகள் பெயரில் சொத்துக்களை வாங்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது. எனவே சாந்தி உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளோம். அத்துடன் வேடசந்தூர் அருகே உள்ள சாந்தியின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில் சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதை வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது .இவ்வாறு அவர்கள் கூறினார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த பெண் சார் பதிவாளர் மீது வழக்கு..!
