கோவை இருகூர் பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 67 ) இவருக்கு சொந்தமான நிலத்தில் நீலி கோணாம்பாளையத்தைச் சேர்ந்த திருமணி (வயது 74 ) என்பவர் பழைய பிளாஸ்டிக் ,அட்டை பெட்டி,சாக்கு ஆகியவற்றை போட்டு வைக்கும் குடோன் நடத்தி வருகிறார் .இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் திடீரென்று அந்த குடோனில் தீப்பிடித்தது .. அங்கிருந்த அட்டைப் பெட்டிகள் பிளாஸ்டிக் பொருட்களில் தீ மளமளவென்று பரவத் தொடங்கியது. இது குறித்து சிங்காநல்லூர் காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.. இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. இந்த குடோன் அருகே பல்வேறு கம்பெனிகள் செயல்பட்டு வருகின்றன. உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
கோவை இருகூர் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து..!
