கஞ்சா – போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது..!

கோவை உக்கடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி, சப் இன்ஸ்பெக்டர் அஜய் சர்மா ஆகியோர் நேற்று உக்கடம் சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள்ள அண்ணா நகர் ,முதல் வீதியில் ரோந்துசுற்றி வந்தனர். அப்போது அங்கு மறைவான இடத்தில்சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 1 கிலோ 200 கிராம் கஞ்சா, 70 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவரிடம் இருந்த 2 செல்போன்,பணம் ரூ 3,250 ஆகியவை கைப்பற்றப்பட்டது இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்