தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். நடப்பு திமுக அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால், இந்த பட்ஜெட் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அதன்படி, பல புதிய திட்டங்களும் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. தொழில் வளர்ச்சி, மாணவர் நலன் மற்றும் போக்குவரத்து துறைக்கு முன்னுரிமை அளித்து பல திட்டங்களும் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு என 29 ஆயிரத்து 465 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 26 ஆயிரத்து 678 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
பள்ளிக்கல்வித்துறைக்கு 46 ஆயிரத்து 767 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
உயர்கல்வித்துறைக்கு 8 ஆயிரத்து 494 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
சமுக நலன் மற்றும் மகளிர் நலன் துறைக்கு 8 ஆயிரத்து 597 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு ரூ.572 கோடி நிதி ஒதுக்கீடு
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறைக்கு 21 ஆயிரத்து 906 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
தொழில் முதலீடு ஊக்குவிப்பு துறைக்கு 3 ஆயிரத்து 915 கோடி நிதி ஒதுக்கீடு
சிறுகுறு தொழில் துறை மேம்பாட்டிற்கு ஆயிரத்து 918 கோடி நிதி ஒதுக்கீடு
எரிசக்தி துறைக்கு மொத்தமாக 21 ஆயிரத்து 168 கோடி நிதி ஒதுக்கீடு
போக்குவரத்து துறைக்கு 12 ஆயிரத்து 964 கோடி ரூபாய்நிதி ஒதுக்கீடு
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறைக்கு ஆயிரத்து 975 கோடி நிதி ஒதுக்கீடு
தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறைக்கு ரூ.131 கோடி ஒதுக்கீடு
நீர்வளத்துறைக்கு 9 அயிரத்து 460 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
எரிசக்தி துறைக்கு 21 அயிரத்து 178 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு 3 ஆயிரத்து 924 கோடி ரூபாய் ஒதுக்கீடு
சிறுபான்மையினர் நலத்துறைக்கு ஆயிரத்து 563 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ஆயிரத்து 433 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறைக்கு ஆயிரத்து 980 கோடி ரூபாய் ஒதுக்கீடு
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு 7 ஆயிரத்து 718 கோடி ரூபாய் ஒதுக்கீடு
பொதுப்பணித்துறைக்கு 2 ஆயிரத்து 457 கோடி நிதி ஒதுக்கீடு
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறைக்கு 20 ஆயிரத்து 722 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது