சென்னை: பெரம்பலூர் நிர்வாக மாவட்ட பதிவாளர் மீரா மொஹிதீன் பாளையங்கோட்டை நிர்வாக மாவட்ட பதிவாளராகவும், பாளையங்கோட்டை நிர்வாக மாவட்ட பதிவாளர் சண்முகசுந்தரி திருநெல்வேலி தணிக்கை மாவட்ட பதிவாளராகவும், பெரம்பலூர் தணிக்கை மாவட்ட பதிவாளர் கோபாலகிருஷ்ணன் தாம்பரம் நிர்வாக மாவட்ட பதிவாளராகவும், கடலூர் தணிக்கை மாவட்ட பதிவாளர் செல்வகுமார் பழனி தணிக்கை மாவட்ட பதிவாளராகவும், பழனி தணிக்கை மாவட்ட பதிவாளர் ராணி பெரம்பலூர் தணிக்கை மாவட்ட பதிவாளராகவும், பழனி நிர்வாக மாவட்ட பதிவாளர் ஜெய்ப்பிரகாஷ் சேரன்மகாதேவி நிர்வாக மாவட்ட பதிவாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல தஞ்சாவூர் துணை பதிவுத்துறை தலைவர் ஆனந்த், மதுரை துணை பதிவுத்துறை தலைவராகவும், திருநெல்வேலி துணை பதிவுத்துறை தலைவர் செந்தமிழ் செல்வன் தஞ்சாவூர் துணை பதிவுத்துறை தலைவராகவும் இடம் மாற்றப்பட்டுள்ளனர் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் குமார் ஜெயந்த பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.