தமிழக பட்ஜெட் புறக்கணித்து அதிமுக வெளிநடப்பு..!

மிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. 2025-2026-ம் ஆண்டுடிற்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார்.

இந்நிலையில் அதிமுக அமளியில் ஈடுப்பட்டு வெளிநடப்பு செய்திருக்கிறது.

செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அன்றைக்கு எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் சட்டசபைத் தலைவராக இருந்த தனபாலை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று சொன்னப்போது 14 நாள்கள் கழித்து அந்தத் தீர்மானத்தை நாங்கள் எடுத்துக்கொண்டோம். இதுவரலாறு, இதனை யாரும் மறுக்க முடியாது. அதேபோல நாங்கள் கூறிய சட்டமன்ற தலைவர் அப்பாவுவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தீர்மானத்தை முன்வைத்திருந்தோம். ஆனால் அவர்கள் அந்த தீர்மானத்தை எடுத்துக்கொள்ளவில்லை. இதனைக் கண்டித்தும் மதுபான ஊழலை கண்டித்தும் திமுக அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம்.