கோவை வணிக வளாக பியூட்டி பார்லரில் விபச்சாரம் – அழகிகள் உட்பட 5 பேர் கைது.!!

கோவை சுந்தராபுரம் பொள்ளாச்சி ரோடு சிக்னல் அருகே உள்ள வணிக வளாகத்தில் பியூட்டி பார்லர் செயல்பட்டு வந்தது.இங்கு மசாஜ் என்ற பெயரில் அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக சுந்தராபுரம் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அங்கிருந்த மதுக்கரை அறிவொளி நகர் விவேகானந்தர் சதுக்கத்தை சேர்ந்த ராஜிவ் (30)மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மும்தாஜ் (38) பீளமேடு ராமானுஜனம் நகர் ஜெய் ஸ்ரீ ( 23 ) திருப்பூர் போயம்பாளையம் ( 23 ) பிச்சம்பாளையம் துர்கா (19) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..