பைக் மீது அரசு பஸ் மோதி வாலிபர் பரிதாப பலி..

சேலம் மாவட்டம் ஆத்தூர் பக்கம் உள்ள கருமதுரை, புதுவளவு பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி இவரது மகன் ஸ்ரீதரன் ( வயது 20) இவர் நேற்று பீளமேடு ஹோப் காலேஜ் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார் அப்போது அந்த வழியாக சங்ககிரியில் இருந்து கோவைக்கு வந்த அரசு பஸ் அவரது பைக் மீது மோதியது. இதில் ஸ்ரீதரன் படுகாயம் அடைந்தார் அவரை சிகிச்சைக்காக இஎஸ்ஐ மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் பரிதாபமாக இறந்தார் .இது குறித்து அவரது தந்தை முத்துசாமி கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு பிரிவுபோலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அமுதா சம்பவஇடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இதுதொடர்பாக பஸ் ஓட்டி வந்த சேலம் எடப்பாடி ,ரெட்டிபட்டியைசேர்ந்த ராஜ்குமார் (வயது 44) மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.