கோவையை அடுத்த கோவில்பாளையம் பக்கம் உள்ள விளாங்குறிச்சியில் அருள்மிகு. அங்காளம்மன் கோவில் உள்ளது. சம்பவத்தன்று இங்கு பூஜை முடிந்ததும் பூசாரி கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் வந்து பார்த்தபோது கோவிலின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த அம்மனின் 5 பவுன் தங்க நகையை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர் .இதுகுறித்து கோவில் நிர்வாகி துரைசாமி கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் சேலம் மாவட்டம் .ஓமலூரை சேர்ந்த நடராஜன் மகன் பிரபாகரன் ( வயது 39) என்பவர் கோவிலுக்குள் புகுந்து நகையை திருடியது தெரிய வந்தது .உடனே போலீசார் பிரபாகரனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 பவுன் நகை மீட்கப்பட்டது . கைதான பிரபாகரன் மீது சரவணம்பட்டி காவல் நிலையத்திலும் திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவிலில் சாமி நகைகள் திருட்டு – கண்காணிப்பு கேமராவில் சிக்கிய கொள்ளையன்..!
