கோவை அவிநாசி ரோடு – தென்னம்பாளையம் அருகே ஒரு கார் கேட்பாரற்று நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. இது குறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை தலைமையில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அந்த கார் ஆந்திர மாநில பதிவு எண் கொண்டதாகும். அதற்குள் யாரும் இல்லை. யாரும் உரிமை கோராமல் அதிக நேரம் நின்றதால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரின் கதவை திறந்து சோதனை செய்தனர். அப்போது காருக்குள் விலை உயர்ந்த செல்போன்கள் இருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த கார் மற்றும் அதற்குள் இருந்த செல்போன்களை பறிமுதல் செய்து சூலூர் காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர். அதில் மொத்தம் 74 செல்போன்கள் இருந்தன .அவை அனைத்தும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டவை ஆகும்.அதன் மதிப்பு ரூ.7 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..இது தொடர்பாக 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கேட்பாரற்று நின்றிந்த காருக்குள் 74 செல்போன்கள் பறிமுதல் – 3 பேருக்கு வலைவீச்சு.!!
