திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சௌராஷ்டிரா நடுநிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் சுதாகரன் தலைமை வகித்தார், தலைமை ஆசிரியர் ஸ்ரீநேரு முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, வட்டார கல்வி அலுவலர் செல்லின் மேரி, நிலக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், ஒன்றிய பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் டாக்டர் செல்வராஜ், வட்டார வள மைய பொறுப்பு அலுவலர் கருப்பையா ஆகியோர் கலந்துகொண்டு விளையாட்டு போட்டி ,கவிதை ,பேச்சு, கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற மாணவர்களுக்கும் பரிசு வழங்கி பாராட்டினர் . பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் நூற்றாண்டு நினைவு கேடயம் மாவட்ட கல்வி அலுவலர் வழங்கி சிறப்பு செய்தார். விழாவில் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் வரவேற்புரை ஆசிரியர் பத்மினி வழங்கினார். நிறைவாக ஆசிரியர் ராஜி நன்றி கூறினார்.