பெட்ரோல் குண்டு வீச முயன்ற வழக்கில் கைதான 4 பேர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்.!!

கோவை செல்வபுரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் பா.ஜ.க ஆன்மிக ஆலயம் மேம்பாட்டு பிரிவு கோட்ட செயலாளராக உள்ளார் .அத்துடன் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவருடைய அலுவலகம் செல்வபுரம் சிவாலயா சந்திப்பு பகுதியில் உள்ளது. இந்த அலுவலகத்தில் கோவை மைல்கல் பகுதியைச் சேர்ந்த நாசர் பாஷா (வயது 36) என்பவரின் அண்ணன் வேலை செய்து வந்தார். அண்ணனை பார்க்க நாசர் பாட்ஷா அடிக்கடி சென்று வந்தார்.இதனால் அவருக்கு மணிகண்டனுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் மணிகண்டனை சந்தித்த நாசர் பாஷா தனக்கு ரூ.5 ஆயிரம் கடன் தரும்படி கேட்டார் .அதற்கு அவர் பணம் இல்லை என்று கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த நாசர் பாஷா 2 பெட்ரோல் குண்டுகளை தயார் செய்து தனது இருசக்கர வாகனத்தில் வைத்துக்கொண்டு மணிகண்டன் அலுவலக வீசுவதற்காக சென்றார்.அப்போது அங்கு ரோந்து சுற்றி வந்த செல்வபுரம் போலீசார் நாசர் பாஷாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய அவருடைய நண்பர்களான பைசல் ரகுமான், ஜாகிர் உசேன், இதயத்துல்லா, முகமது ஹர்சத் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இவர்கள் 4 பேரையும் குண்ட தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவு பிறப்பித்தார். இதை யடுத்து 3 பேரும்குண்டர்தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களுக்கு நேற்று வழங்கப்பட்டது.