கோவை வந்தார் இந்திய ரயில்வே பாதுகாப்பு படை டிஜிபி..!

இந்திய ரயில்வே பாதுகாப்பு படை டி.ஜி.பி.யாக பதவி வகித்து வருபவர் மனோஜ் குமார் ஐபிஎஸ் .இவர் டெல்லியில் இருந்து இன்று காலை கோவை வந்தார். கோவை ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி எப்) அலுவலகத்திற்கு சென்றார். அவருக்கு ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் அணி வகுப்பு மரியாதை கொடுத்தனர். பின்னர் அதிகாரிகளிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார் ரயில் நிலையத்தை ஆய்வு செய்தார்..