தோட்டத்து கிணற்றில் விவசாயி சடலம்..

கோவை மதுக்கரை பக்கம் உள்ள பிச்சனூர், எல்லை மாகாளியம்மன் கோவில் தோட்டத்தை சேர்ந்தவர் செந்தில் வடிவேல் ( 65 ) விவசாயி .இவர் கடந்த 14ஆம் தேதி வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை எங்கோ மாயமாகிவிட்டார். இந்த நிலையில் நேற்று அங்குள்ள தோட்டத்து கிணற்றில் செந்தில் வடிவேல் பிணமாக மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து அவரது மகன் பிரகாஷ் கே.ஜி. சாவடி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.