மாணவர்களுக்கு உயர்ரக போதை பொருள் விற்ற 2 பேர் கைது – பைக்கில் தப்பி ஓட முயன்ற போது கீழே விழுந்து கை,கால் முறிந்தது..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு 2 பேர் உயர் ரகபோதை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் செட்டிபாளையம் போலீசார் செட்டிபாளையம் அருகே ஜெ. ஜெ .நகர் மேம்பாலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள் வந்த 2 பேரை தடுத்து நிறுத்தினார்.ஆனால் அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல்மின்னல் வேகத்தில் தப்பிச் செல்ல முயன்றனர். அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் தவறி கீழே விழுந்தனர். இதில் அவர்களின் கை -கால் எலும்பு முறிந்தது .உடனே போலீசார் 2 பேரையும் மடிக்க பிடித்தனர் .விசாரணையில் அவர்கள் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தீபன் ராஜ் ( 23 ) கிருத்திக் ரோஷன் ( 21 ) என்பதும் அவர்கள் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா போதை மாத்திரை உயர் ரக போதை பொருளான மெத்த பெட்டமின் விற்பனை செய்ததும் தெரியவந்தது. மோட்டார் சைக்கிள் என்று கீழே விழுந்த தீபன்ராஜிக்கு வலது காலும் ,கிருத்திக் ரோஷனுக்கு வலது கையும் உடைந்தது. தெரிய வந்தது உடனே அவர் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள், உயர் ரக போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதை யடுத்து 2 பேரையும் போலீசார் கோவைஅரசு மருத்துவமனையில்சேர்த்தனர்.அங்கு அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:- கைதான ? பேரும் இன்ஸ்டாகிராம் தனி குழு தொடங்கி கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருட்களை விற்பனை செய்துள்ளனர். அதற்கான தொகையை மூலம் ” கூகுள் பே” மூலம் பெற்று வந்துள்ளனர் இந்த 2 பேர் மீதும் செட்டிபாளையம், பேரூர், சரவணம்பட்டி உட்பட பல்வேறு காவல் நிலையம் திருட்டு |கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது.கைதான் அவர்களுக்கு போதை பொருட்களை சப்ளை செய்பவர்கள் யார்? போதை பொருட்களை கல்லூரி மாணவர்களுக்கு கொடுப்பது யார்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.