கோவை மார்ச் 18 அவிநாசி அருகே உள்ள குன்னத்தூர், புது காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம் (55)பனியன் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவர் அந்த பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு ஆசை வார்த்தை காட்டி பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அவினாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆறுமுகத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்..
8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு – போக்சோவில் தொழிலாளி கைது..!
