கோவை மாநகரில் ரூ.11 கோடி மதிப்பீட்டில் 40 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டப் பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசிடம் சமர்பிக்கப்பட்டது.
கோவையில் அவிநாசி சாலை, சத்தி சாலை என இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. உக்கடத்தில் தொடங்கி அவிநாசி சாலை வழியாக நீலாம்பூர் வரை 20 கிலோ மீட்டர் தொலைவு ஒரு வழித்தடத்திலும், கோவை ரயில் நிலையத்தில் தொடங்கி, காந்திபுரம் ஆம்னி பேருந்து நிலையம் வழியாக சத்தி சாலை வழியாம்பாளையம் பிரிவு வரை 20 கிலோ மீட்டர் தொலைவு வரை மற்றொரு வழித்தடத்திலும் இந்தத் திட்டம் அமைக்கப்பட உள்ளது. மொத்தம் 40 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
கோவையில் மேம்பாலத் தூண்கள் மூலமாக மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்றும் இதற்காக இரு மார்க்கத்திலும் தலா 10 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு, நீலாம்பூரில் ரயில்பணிமனை அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கோவை ரயில் நிலையம், விமான நிலையம், பஸ் நிலையங்களை இணைக்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு, வருங்காலங்களில் மேட்டுப்பாளையம் சாலை, திருச்சி சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.
இந்த நிலையில் மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மெட்ரோ ரயில் பாதை அமைக்க, நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சியுடன் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொண்டு உள்ளது. இதை தொடர்ந்து நேற்று உக்கடம் பஸ் நிலையம் அருகில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் பூமிக்கு அடியில் செல்லும் குடிநீர் பகிர்மான குழாய்கள், மின்சார கேபிள்கள், தொலை தொடர்பு கேபிள்கள், எரிவாயு பைப் லைன் மற்றும் பாதாள சாக்கடை உள்ளிட்ட விவரங்களை அறிவதற்காக யுடிலிட்டி மேப்பிங் நிபுணர் குழுவினர் பூர்வாங்க பணிகளை மேற்கொண்டனர். இதனை அடுத்து மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிலம் கையப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்ட உள்ளனர்.
கோவையில் ரூ.11 ஆயிரம் கோடியில் மெட்ரோ ரயில் திட்ட சர்வே பிளேன் ரெடி.!!
