கோவை அருகே உள்ள ஆலாம்பாளைளயம் குள்ளப்பள்ளித்தோட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரதுமனைவி சரஸ்வதி (48). இவருக்கு அரசூர் பகுதியில் 5½ சென்ட் நிலம் இருந்தது. அந்த நிலத்தை அதே பகுதியை சேர்ந்த சத்யமூர்த்தி, விஜயராகவன், ஆறுமுகம் மற்றும் மணி ஆகியோர் போலி ஆவணங்கள் தயாரித்து வேறு ஒருவருக்கு விற்பனை செய்து மோசடி செய்ததாக தெரிகிறது.
அந்த நிலத்தின் மதிப்பு ரூ.55 லட்சத்துக்கும் மேல் இருக்கும்.. இது குறித்து சரஸ்வதி கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் 4 பேரும் சேர்ந்து போலி ஆவணங்கள் தயாரித்து நிலத்தை மோசடி செய்தது கண்டுபிடிக்கபட்டது. இதையடுத்து போலீசார் சத்யமூர்த்தி, ஆறுமுகம் ஆகிய 2 பேரை கைது செய்தனர். தலைமறைவான விஜயராகவன் மற்றும், மணி ஆகியோரைதேடி வருகின்றனர்.