சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ், பத்திரமாக பூமிக்குத் திரும்பினார். அவர் பயணித்த டிராகன் விண்கலம், புளோரிடா மாகாணத்திற்கு அருகில், கடலில் இறங்கி மிதந்தது.
சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்கு திரும்ப வேண்டும் என அவரின் சொந்த கிராமமான குஜராத்தில் உள்ள ஜூலாசனில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட நிலையில் சுனிதாவின் வருகையை மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.