கோவை மாநகர போலீசாருக்கு சோலார் தொப்பி, நீர் மோர்..!

கோவை : கோடை காலம் தொடங்கியுள்ளது. இதனால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதைப் போக்க கொளுத்தும் வெயிலிலும் நின்று பணியாற்றி வரும் போலீசாருக்கு மாநகர காவல் துறையின் சார்பில் சோலார் தொப்பியும், முக்கிய சந்திப்புகளில்,நீர் மோரும் வழங்கப்பட உள்ளது.இதை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் கோவை அண்ணா சிலை அருகே இன்று மதியம் நடந்த விழாவில் தொடங்கி வைத்தார்.