கோவை காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன்,சப் இன்ஸ்பெக்டர் அய்யாசாமி ஆகியோர் நேற்று காந்திபுரம் டெக்ஸ்டூல்பாலம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 1கிலோ 500 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டம்,திருச்செந்தூர் பக்கம் உள்ள வீரபாண்டியன் பட்டணம், தாமஸ் வீதியைச் சேர்ந்த ஜெயராஜ் மகன் ராபின் பிரதீப் (வயது 26 )என்பது தெரிய வந்தது. இவர் தூத்துக்குடியில் இருந்து கஞ்சா கடத்தி வந்து கோவையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ததாக விசாரணையில் தெரிய வந்தது.இவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது..
மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை – தூத்துக்குடி வாலிபர் கைது..!
