கோவையில் அரசு பள்ளி ஆசிரியை எரித்து படுகொலை..

கோவை மதுக்கரை அருகே உள்ள அரிசி பாளையத்தை சேர்ந்தவர் பத்மா ( வயது 56)இவர் அங்குள்ளநாச்சி பாளையம் அரசு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். அங்குள்ள காட்டுப்பகுதியில் இன்று காலையில் உடல் கருகிய நிலையில் பத்மா பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து மதுக்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இவரை யாரோ கடத்தி வந்து பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்திருப்பதாக சந்தேகிக்க படுகிறது.இதுகுறித்து மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.ஆசிரியை எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.