ஜாகிர் உசேன் கொலை வழக்கில் கோவை உதவி கமிஷனர் சஸ்பெண்ட்..!

நெல்லையில் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் படுகொலை செய்யப்பட்டார்.இந்த விவகாரத்தில் அப்போது நெல்லையில் உதவி கமிஷனராக பணிபுரிந்து வந்த செந்தில்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.இவர் தற்போது கோவை மாநகர சிறப்பு நுண்ணறிவு பிரிவு (எஸ்.ஐ.சி)உதவி கமிஷனராக பணிபுரிந்து வருகிறார்.இவர் நெல்லையில் பணியாற்றியபோது ஜாகிர் உசேன் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காததால் அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதற்கானஉத்தரவை டிஜிபி சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ளார்.