கோவை லாட்ஜில் தங்கி இருந்த சினிமா நடிகர் திடீர் மரணம்..

கேரள மாநிலம் ,மலப்புரம் மாவட்டம் ஆதலூர் திப்பலூர் பக்கம் உள்ள பரம்பாது படியை சேர்ந்தவர் ஹரிதாசன் ( வயது 39) சினிமா துணை நடிகர்.இவர் கடந்த ஒரு வாரமாக மருதமலை உக்கடம் உட்பட பல்வேறு இடங்களில் நடைபெறும் மலையாள சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக மருதமலை அடிவாரத்தில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி இருந்தார்.அவருக்கு நேற்று திடீரென்று மயக்கம் ஏற்பட்டது. அவரை சினிமா படப்பிடிப்பு வாகனத்தில் ஏற்றிக் கொண்டுதனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வழியில் அவர் இறந்துவிட்டார். இதுகுறித்து வடவள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது.சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.