18வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் 18வது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த சீசனிலும் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ளன. இந்த சீசனுக்கான மெகா ஏலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. இதில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு வாங்கப்பட்டனர். இதனையடுத்து ஐபிஎல் அணிகள் தங்களது வீரர்களை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த சீசனிலும் இம்பக்ட் பிளேயர் விதி நீடிக்கும் நிலையில், பந்தை எச்சில் தேய்ப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 18வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று நடக்கிறது. முதல் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடர்ன் கார்டன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. போட்டிக்கு முன்பாக தொடக்க விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.