கோவை அருகே உள்ள நீலி கோணாம்ளையம், ஆர். கே. கே. நகரை சேர்ந்தவர் பிரபு ( வயது 52 )இவர்சிங்காநல்லூர், நீலிக்கோணாம் பாளையத்தில் கடந்த 7 ஆண்டுகளாக ஓட்டலும் – ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.நேற்று முன் தினம் ஓட்டலை பூட்டி விட்டு விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலையில் வந்து பார்த்தபோது ஓட்டல் ஷட்டர் கதவு திறக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பணப்பெட்டியில் இருந்த ரூ 1 லட்சத்து 50 ஆயிரத்தை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர் .இது குறித்து பிரபு சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை ஓட்டலில் திருட்டு..!
