தனியாக இருக்கும் மூதாட்டியை தாக்கி கூட்டு பாலியல் பலாத்காரம் – 3 வடமாநில தொழிலாளர்கள் கைது..!

கோவையை அடுத்த கோவில் பாளையம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 65 வயது மூதாட்டி .இவர் தனியாக வசித்து வருகிறார்.கூலி வேலை செய்து பிழைப்பு நடத்துகிறார்.இந்த மூதாட்டியின் வீடு அருகே கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளில் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்று அதிகாலையில் மூதாட்டி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த வட மாநில தொழிலாளர்கள் 3 பேர மூதாட்டியை தாக்கி கீழே தள்ளினார் .பின்னர் மூதாட்டி என்று கூட பார்க்காமல் அவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்..இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மூதாட்டி கதறி அழுதார் .சத்தம் கேட்டு அக்கம் -பக்கம் ஓடி வந்தனர். உடனே அந்த வட மாநில தொழிலாளிகள் தப்பி ஓட முயன்றனர். அவர்களை சுற்றி வளைத்து அக்கம் . பக்கம் உள்ளவர்கள் மடக்கி பிடித்தனர். அவர்களுக்கு தர்ம அடி கொடுக்கப்பட்டது. 2பேரை பிடித்து கோவில் பாளையம் போலீசில் ஒப்படைத்தனர்.ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அத்துடன் தப்பி ஓடிய நபரை போலீசார் தேடி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.. கூட்டுபாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மூதாட்டி.கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது