கோவை மாவட்டம், சூலூர் வட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜே. கிருஷ்ணாபுரம் கிராமத்தில் அருள் மிகு மதுரைவீரன், பட்டந்தரசி அம்மன் கோவிலில் பூசாரியாக இருக்கும் ஆறுமுகம் பொறுப்பு ஏற்ற காலத்திலிருந்து கோவில் நடைமுறை களையும், பூஜையையும் சரிவர செய்வதில்லை மற்றும் விழாக்
காலங் களிலும் விசேஷ காலங்களிலும் பூட்டிவிட்டு சொந்த பணிகளுக்கு சென்று விடுகிறார். இது சம்மந்தமாக அவரிடம் கூறியும் எவ்வித பதிலும் தகவல் இதுவரை இல்லை. இது சம்மந்தமாக 14.04.2025 அன்று ஊர்பொது பொதுமக்கள் ஒன்று கூடி பூசாரி ஆறுமுகத்திடம் கேட்டபோது அவர் நான் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிகிறேன் ஆட்டோ தொழிற்சங்கத்தில் பொறுப்பில் இருக்கிறேன் கிராம கோயில் பூசாரிகள் சங்கத்திலும் இருக்கிறேன் எனக்கு மாத ஊதியம் வருகிறது அதனால் உங்கள் இஷ்டத்துக்கு என்னால் கோயில் திறக்க முடியாது எனக்கு எப்பொழுது நேரம் இருக்கிறதோ அப்பொழுதுதான் நான் திறப்பேன் என கண்டிப்புடன் கூறிவிட்டதாகவும் எனக்கு அரசியல் பலம் இருப்பதால் என்னை நீங்கள் எதுவும் செய்ய முடியாது எனவும் ஆணவத்தோடு அப்பகுதி மக்களிடம் பேசியதாகவும் கோயில் கட்டுவதற்கு பணம் நன்கொடையாகவும் அரசு மூலம் வந்திருப்பதாக தகவல் தெரிந்து கேட்டதுக்கு அதைப் பற்றி எல்லாம் நீங்கள் கேட்கக்கூடாது என்று மிரட்டும் தோணியில் பொதுமக்களிடம் பூசாரி கூறியதாகவும் ஆகவே கோவிலில் திறக்காமல் பூஜை செய்யாமல் முறையிட்டில் ஈடுபட்டிருக்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர் பணி புரியும் பூசாரி ஆறுமுகத்தை மாற்றி விட்டு பழைய பூசாரிக்கையோ இல்லை வேறு பூசாரி திருக்கோவிலின் நியமிக்க வேண்டும் என்று திருக்கோயில் அறங்காவலர்கள் மந்திரி உள்ளிட்ட பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் சூலூர் வட்ட இந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தில் மனு கொடுத்தனர்..
சூலூர் அருகே கோவிலை பூட்டி பூஜை செய்யாத பூசாரியை மாற்ற கோரி இந்து சமய அறநிலையத்துறையில் பொதுமக்கள் மனு.!
