கோவை சூலூர் அருகே உள்ள பீடம் பள்ளி கள்ளித்தோட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். (வயது 45) இவருக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலத்தில் விவசாயம் வருகிறார். அவரது தோட்டத்தில் உள்ள ஒரு காலி கொட்டகை உள்ளது. இதை நாய் வளர்ப்பதற்காகபாப்பம்பட்டியை சேர்ந்த தர்மராஜ் மகள் ரம்யா (வயது 34) என்பவருக்கு வாடகைக்கு கொடுத்திருந்தார் .இதில் அவர் நாய்க்குட்டிகள் வளர்த்து வந்தார். இந்த நிலையில் அவரது தோட்டத்திற்கு இரவில் சிலர் வந்து சென்றனர். இது ராஜேந்திரனுக்கு பிடிக்கவில்லை ..இதனால் வீட்டை காலி செய்யுமாறு கூறினார்.இதற்கு ரம்யா மறுத்ததால் நேற்று இரவு அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தார் பின்னர் ரத்தக்கரை படிந்த அரிவாளுடன் சூலூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை அவரை கைது செய்தார்.இவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடத்தையில் சந்தேகம்… நள்ளிரவில் பெண் வெட்டிக் படுகொலை – தோட்ட அதிபர் கைது..!
