125 கிலோ குட்கா பறிமுதல் – 2 பேர் கைது..!

கோவை சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை, சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் ஆகியோர் நேற்று கோவை – திருச்சி ரோட்டில் கதிரி மில் பஸ் ஸ்டாப் அருகே திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு 125 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் (குட் கா) மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ. 1 லட்சம் இருக்கும். இது தொடர்பாக ரவி (வயது 52) வில்லியம் தங்கராஜ் (வயது 43) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.