பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து உரிய நேரத்தில் முடிவு – நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.!

ழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை இன்று(ஏப். 22) 9.30 மணிக்கு கூடியவுடன் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவரான போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

இதனைத் தொடந்து கேள்வி நேரத்தில், பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படுமா? என்று மதுராந்தகம் பேரவை உறுப்பினர் மரகதம் குமாரவேல் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, “அரசு ஊழியர்களின் நலனில் முதல்வர் ஸ்டாலின் அரசு அக்கறையோடு செயல்பட்டு வருகிறது. அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் குறித்து ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து முதல்வரிடம் பேசி உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

கேள்வி நேரத்தைத்தொடர்ந்து பேரவையில், எரிசக்தி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெறவுள்ளன.

இந்த விவாதங்களுக்கு துறையின் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளார்.