தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள்  தேர்வு!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள்  தேர்வு சையது அம்மாள் மெட்ரி குலேஷன் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகியாக மாவட்ட தலைவர் சண்முகம் , மாவட்டச் செயலாளர் சேகர்,
மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் புதிய நிர்வாகியாக பொறுப்பேற்றுள்ளனர் .

அதனை தொடர்ந்து செல்லதுரை அப்துல்லா , இன்ஸ்டின் ஆகியோர் முன்னிலையில் தனியார் பள்ளிகளின் வளர்ச்சி, அரசின் மூலம் பெறக்கூடிய சலுகைகள் உட்பட ஆலோசனை மற்றும் விவாதங்கள் நடைபெற்றன.  இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளில் தாளாளர்கள் கலந்து கொண்டனர்.