காரில் கடத்தப்பட்ட 205 கிலோ புகையிலை பொருள் பறிமுதல் . 2 பேர் கைது.

கோவை ஏப்23 கோவை சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை,சப் இன்ஸ்பெக்டர் முருகநாதன் ஆகியோர் நேற்று இரவு கோவை – திருச்சி ரோட்டில் காங்கேயம் பாளையம் சோதனை சாவடி அருகே வாகன சோதனை நடத்தினார்கள்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் அதில் 205 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் (குட்கா ) கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக இது கடத்தி வந்த சேலம், நெத்திமேடு மீரா உசைன் (வயது 33) கோகுலநாதன் ( வயது 20) ஆகியோரை கைது செய்தனர். காரும், குட்காவும் பறிமுதல் செய்யப்பட்டது.