கோவை ஏப்24 கோவை மாவட்ட அன்னூர்,பொன்னே கவுண்டன் புதூர் பக்கம் உள்ள செந்தாம் பாளையத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மனைவி நித்யா ( வயது 29) கடந்த ஞாயிற்றுக்கிழமை தண்டபாணி அவரது வீட்டுக்கு மட்டன் வாங்கி வந்தார்.குறைவாக வாங்கி வந்ததால் நித்யாவுக்கும், தண்டபாணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த நித்யா சாணி பவுடர் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கணவர் தண்டபாணி அன்னூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செல்வன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மட்டன் குறைவாக வாங்கி வந்ததால் மனைவி விஷம் குடித்து தற்கொலை .
