நள்ளிரவில் டாஸ்மாக் பாரில் மது கொடுக்க மறுத்த ஊழியருக்கு பாட்டில் குத்தியா வாலிபர் கைது

கோவை ஏப் 24

கோவை மாவட்டம் காரமடை பக்கம் உள்ள புஜங்கனூர், கணுவாய் பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 38) அங்குள்ள டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவில் இவர் வேலை முடிந்து பாரில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் ஒரு நபர் பாருக்கு வந்து மது கேட்டார். அவர் இப்போது கொடுக்க முடியாது. நாளைக்கு வாருங்கள் என்றார்.இதனால் ஆத்திரமடைந்த அந்த ஆசாமி பாட்டிலை உடைத்து சக்திவேலை குத்தினார். இதில் இவருக்கு பலத்தக்காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை சேர்க்கப்பட்டார். இது குறித்து காரமடை போலீசில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் வழக்கு பதிவு செய்து காரமடை மங்கல கரை புதூரை சேர்ந்த ஜெயக்குமார் மகன் ராகுல் (வயது 21) என்பவரைநேற்று மாலை கைது செய்தார்.இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.