கோவை ஏப் 24 கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஆனைமலை, சுங்கம் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் செல்லதுரை (வயது 59)நேற்று இவர் அவரது வீட்டில் உள்ள பழைய மின்சார மோட்டாரை மாற்றிக் கொண்டிருந்தார் அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.இதைப் பார்த்து இவரது மனைவி சத்தம் போட்டார் .அக்கம் பக்கம்உள்ளவர்கள் ஒடி வந்தனர். அதற்குள் செல்லதுரை இறந்து விட்டார். இதுகுறித்து அவரது மனைவி சகாய சில்வியாஆனைமலை போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மின்சாரம் தாக்கி மனைவி கண் முன் கணவர் உயிர்இழப்பு.
