எடப்பாடி கொடுத்த தடபுடல் விருந்து… அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர்‌ ஆப்சென்ட்… கவலையில் இபிஎஸ்.!!

திமுக கட்சியில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் செங்கோட்டையன் இடையே சலசலப்பு நிலவி வருகிறது. இவர்கள் இருவரும் சமீப காலமாக ஒரே நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறார்கள்.

முன்னாள் முதல்வர் என்று செங்கோட்டையன் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் ஆகியோரை புகழும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை பொதுச் செயலாளர் என்று மட்டும் தான் கூறுகிறார் தவிர பெயரை சொல்வதில்லை.

இந்நிலையில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது அதிமுகவினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படும் நிலையில் பலர் அடுத்தடுத்து கட்சியில் இருந்து விலகி வருகிறார்கள். இதனால் எம்எல்ஏக்களை மகிழ்ச்சி படுத்துவதற்காக எடப்பாடி பழனிச்சாமி நேற்று விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த விருந்தினர் நிகழ்ச்சியில் முக்கிய எம்எல்ஏக்கள் நால்வர் ஆப்சன்ட் ஆனதாக கூறப்படும் நிலையில் அதில் ஒருவர் செங்கோட்டையன்.

இதன் மூலம் செங்கோட்டையன் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இடையே பிரச்சனை என்று கூறப்படுகிறது. கடந்த வாரம் ஒரு நிகழ்ச்சியில் செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமியை புகழ்ந்து பேசியதால் பிரச்சனை தீர்வானதாக கூறப்பட்டது. ஆனால் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியை புறக்கணித்ததால் மீண்டும் பிரச்சனை இருக்குமோ என்று கூறப்படுகிறது.

மேலும் சூலூர் எம்எல்ஏ கந்தசாமி, பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரி, திண்டிவனம் எம்எல்ஏ அர்ஜுனன் ஆகியோரும் இந்த விருந்தை புறக்கணித்ததாக கூறப்படுகிறது.