பஹல்காம் தாக்குதல்… பயங்கரவாதிகள் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.20 லட்சம் சன்மானம்..!

ம்மு காஷ்மீரின் பஹல்காம் என்ற இடத்தில் சுற்றுலாத் பயணிகள் மீது நேற்று பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தியதில், 02 வெளி நாட்டவர் உள்பட 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டதோடு, பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாக வைத்து இயங்கும் லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றுள்ளது. இதையடுத்து, பயங்கரவாதிகளைப் பிடிக்க ராணுவத்தினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும், தகவல் கொடுப்பவர்கள் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அனந்த்நாக் மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக லடாக்கிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.