டாஸ்மாக்கில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியதில் அசாதாரணமானது ஏதுமில்லை எனறு கூறியதுடன், அமலாக்கத்துறை தனது விசாரணையை தொடரலாம் என உத்தரவிட்ட நீதிமன்றம், தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனத்தின் மனுக்களை டிஸ்மிஸ் செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.இது திமுக அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே செந்தில் பாலாஜி வழக்கில், உச்சநீதிமன்றம், அவருக்கு அமைச்சர் பதவியா? பெயில் ரத்தா? (ஜாமின்) என கெடு விதித்துள்ள நிலையில், தற்போது அவரது துறையான டாஸ்மாக் ரெய்டு குறித்த வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டியுள்ளது.
அமலாக்கத்துறையினர் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை அமலாக்கத்துறையினர் 3 நாட்கள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையுடன், டாஸ்மாக் நிறுவனத்துக்கு மது சப்ளை செய்யும் நிறுவனங்களில் அமலாக்கத்துறை நடத்தியது. இந்த சோதனை யில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
அமலாக்கத்துறையின் ரெய்டு, நடவடிக்கை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனம் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், எம்.எஸ்.ரமேஷ் மற்றும் செந்தில்குமார் அமர்வு அமலாக்கத்துறை நடவடிக்கையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. இது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அதில் இருந்து விலகினர். இதையடுத்து நீதிபதிகள் சுப்ரமணியன் ராஜசேகர் அமர்வு விசாரித்தது. இதற்கிடையில் தமிழ்நாடு அரசு அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தது. ஆனால், இந்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. இந்த நிலையில், வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள், எஸ்.எம்.சுப்பிரமணியன் மற்றும் கே.ராஜசேகர் அமர்வு ஏப்ரல் 8ந்தேதி விசாரணையின்போது, தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்ததுடன், டாஸ்மாக் சோதனை தொடர்பாக அமலாக்கத்துறை மேல் நடவடிக்கை எடுக்க தடை இல்லை அதிரயாக அனுமதி வழங்கியது.
இதையடுத்து இந்த வழக்கு மீண்டும் 3 நாட்கள் தொடர் விசாரணை நடத்தியது. இதையடுத்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இன்று (ஏப்ரல் 23) இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை, சோதனையின் போது ஊழியர்களை கைது செய்ததில் அசாதாரணமானது எதுவும் இல்லை என்று கூறிய நீதிபதிகள், டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியபோது, அதன் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அமலாக்க இயக்குநரகத்தால் துன்புறுத்தப்பட்டதாக தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் கழகம் (TASMAC) கூறிய குற்றச்சாட்டுகளை புதன்கிழமை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேலும், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பிரிவு 17 இன் படி சோதனை நடத்தப்பட்டதாகவும், ஊழியர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததாகவும் நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் நீதிபதி கே. ராஜசேகரன் ஆகியோர் அடங்கிய அமர்வு குறிப்பிட்டது.
சென்னையில் உள்ள அரசு நிறுவனத்தின் தலைமையகத்தில் சோதனை நடத்தியபோது, அமலாக்க இயக்குநரகம் தனது ஊழியர்களையும் அதிகாரிகளையும் துன்புறுத்தியதாக தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் கழகம் (TASMAC) கூறிய குற்றச்சாட்டுகளை புதன்கிழமை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சோதனைகள் மற்றும் திடீர் சோதனைகளின்போது, சாட்சியங்கள் அழிப்பதைத் தடுக்க, ஊழியர்கள் தடுத்து வைக்கப்படுவது நடைமுறை சார்ந்த விஷயம் என்றும் நீதிமன்றம் மேலும் கூறியது.
‘சில டாஸ்மாக் அதிகாரிகள், சோதனை நடவடிக்கையின்போது சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டதாக பிரமாணப்பத்திரம் அளித்திருப்பது ஆச்சரியமளிக்கிறது என கூறிய நீதிபதிகள், சோதனை நடவடிக்கை ஒரு சட்டப்பூர்வமான புலனாய்வு நிறுவனத்தால் நடத்தப்பட்டது.
சோதனைகள் மற்றும் திடீர் சோதனைகளின் போது, தகவல் கசிவைத் தடுக்கவும், ஆதாரங்கள் அழிவதைத் தடுக்கவும் ஊழியர்கள் வளாகத்திற்குள் தடுத்து வைக்கப்படுவார்கள் என்பது நடைமுறை சார்ந்த விஷயம். மேலும், இது ஒரு அரசுக்குச் சொந்தமான நிறுவனம், இது ஒரு பொது இடம், ஒரு தனியார் வீடு அல்ல. எனவே, ஒரு சுமூகமான சோதனை நடவடிக்கையை நடத்த ஊழியர்களின் ஒத்துழைப்பு அவசியம்,’என்று நீதிமன்றம் கூறியது.
அரசு அலுவலகங்களில் தங்கள் பணிகளைச் செய்ய பொதுமக்கள் பல நாட்கள் மற்றும் மணிநேரம் காத்திருக்க வேண்டியிருக்கும் அதே வேளையில், போதுமான வசதிகள் இருந்தபோதிலும், ஒரு சில அரசு அதிகாரிகள் தங்கள் அலுவலகங்களில் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகக் கூறப்படுவதால் மட்டுமே ‘முழு அரசு இயந்திரமும் முன்வந்துள்ளது’ என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.