ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர துப்பாக்கி சூடு சம்பவத்தில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்ததோடு பலர் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் உலக நாடுகளும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது.
இந்த தாக்குதலின் காரணமாக இந்திய அரசு பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ளதோடு வாகா எல்லையை மூடவும் உத்தரவிட்டுள்ளது. அதன் பிறகு விசாவை மத்திய அரசை நிறுத்தி வைத்துள்ளதோடு சிந்து நதிநீரையும் நிறுத்தி வைத்துள்ளது.
இதன் காரணமாக பாகிஸ்தானும் சிம்லா ஒப்பந்த உட்பட அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. அதே நேரத்தில் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்களை குவித்து வைத்துள்ளதால் போர் நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக இந்திய ராணுவமும் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் தற்போது எல்லையில் திடீரென பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிசூட்டில் ஈடுபட்டுள்ளது. அதன்படி எல்லை கட்டுப்பாடு கோட்டு பகுதியில் ஒரு சில இடங்களில் சிறிய ரக துப்பாக்கிச் சூடுகளை பாகிஸ்தான் ராணுவம் தொடங்கியுள்ளது.
இந்த தாக்குதலுக்கு இந்தியாவும் பதிலடி கொடுத்துள்ளது. மேலும் இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை என இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.