5, 145 லிட்டர் எரிசாராயம் பதுக்கிய வழக்கில் கைதானவர்மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

கோவை ஏப்25கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் 19- ந் தேதி பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான குடோனில் திடீர் சோதனை நடத்தினார்கள்.

அப்போது கேரளாவில் கள்ளுகடைகளில் கள்ளில் கலப்பதற்காக சுமார் 5145 லிட்டர்கள் எரிசாராயத்தை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததுகண்டுபிடிக்கப்பட்டது.

எரிசாயமும் சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய கேரளா மாநிலம்,திருவனந்தபுரம் மாவட்டம்,குளத்தூர், வெங்கடம்பு என்ற ஊரை சேர்ந்த செல்லப்பன் மகன் பிஜுகுமார் என்ற பிஜு (வயது 48) என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மேற்படி நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்டக் காவல்கண்காணிப்பாளர்டாக்டர்.கார்த்திகேயனுக்கு பரிந்துரை செய்தனர்.

அப்பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் .பவன்குமார் க.கிரியப்பனவர் மேற்கண்ட நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். மேற்படி உத்தரவின்படி எரிசாராயம் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த வழக்கு குற்றவாளியான பிஜுகுமார் @பிஜு என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ்கைது செய்தனர். இதற்கான உத்தரவு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு நேற்று வழங்கப்பட்டது.