பிரபலஆன்லைன் லாட்டரி வியாபாரி கைது.

ரூ 11.64 லட்சம் பணம் -சொகுசு கார் பறிமுதல் .கோவை ஏப்ரல் 26 கோவை வடவள்ளி பகுதியில் ஆன்லைன் மூலம்லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் லாட்டரிகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸ் கமிஷனர் சரவண சுந்தருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை யடுத்து போலீசார் நேற்று சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுவிசாரணை நடத்தினர் .அப்போது அங்குள்ள கருப்பராயன் கோவில் வீதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை செய்த போது அங்கு ஒருவர் ஆன்லைன் மூலம் 3-ம் நம்பர் லாட்டரி விற்பனை செய்வதை போலீசார் கண்டுபிடித்தனர். உடனே போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினார் அதில் அவர் சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த பசுபதி ( வயது 27) என்பதும் ஆன்லைன் மூலம் 3-ம் நம்பர் லாட்டரி விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தததும் தெரியவந்தது. இதை யடுத்து பசுபதியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.11லட்சத்து 64 ஆயிரம் பணமும், காசோலை புத்தகங்கள், ஏ.டி.எம். கார்டு மற்றும் சொகுசு கார் விலை உயர்ந்த செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து இதில் யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்..